Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாலியல் தொழிலாளர்களை கைது செய்ய கூடாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

madhankumar May 26, 2022 & 16:48 [IST]
பாலியல் தொழிலாளர்களை கைது செய்ய கூடாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி..!Representative Image.

பாலியல் தொழில் செய்யும் இடங்களில் ரைடு மேற்கொள்ளும் போது பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, அவர்கள் மீது அபராதம் விதிப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதம் அல்ல ஆனால் பாலியல் கூடங்களைவைத்து நடத்துவது தான் சட்ட விரோதம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பாலியல் தொழிலாளர்களை கைது செய்வது தொடர்பான வழக்கை எடுத்து விசாரித்த எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த உத்தரவில், பாலியல் தொழிலும் ஒரு தொழிலே, மேலும் அந்த தொழிலை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான உரிமை வழங்க வேண்டும், அவர்களுக்கு தகுந்த மரியாதையும் வழங்க வேண்டும். வயது வந்த இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடனோ இறைவரது மனதும் ஒத்து உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் மீது போலீசார் கிரிமினல் வழக்கு தொடர கூடாது என தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொழில் கிரிமினல் குற்றமல்ல:

பாலியல் தொழிலாளர்களும் சட்டத்தின் முழு பாதுகாப்பையும் பெற தகுதியானவர்களே, மேலும் கிரிமினல் சட்டமானது அனைவரின் மீதும் சமமாக பயன்படுத்த வேண்டும். இது பாலியல் தொழிலில் கவனிக்கப்படவேண்டிய விஷயம், வயது வந்த இரண்டு நபர்கள் ஒருவருடன் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் ஆகாது. அவர்கள் மீது போலீசார் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது என கூறியுள்ளனர்.

பாலியல் தொழில் சட்ட விரோதமா:

தன் மனம் உவந்து பாலியல் தொழில் செய்வதை சட்ட விரோதமாக கருத முடியாது. அதனால் அவர்களை கைது செய்வதோ அபராதம் விதிப்பதோ கூடாது. ஆனால் பாலியல் கூடம் நடத்துவது என்பது சட்டவிரோத செயலாகும்.

மேலும் பாலியல் தொழில் செய்யும் ஒருவர் குழந்தை வைத்திருந்தால் அதனை அவர்களிடம் இருந்து பிரிக்க கூடாது, பாலியல் தோழி செய்வதனாலேயே அந்த குழந்தை கடத்தப்பட்டதாக இருக்கலாம் என கருத கூடாது. அதனை மீறி சந்தேகம் இருந்தால் இருவருக்கும் மரபணு சோதனை செய்து முடிவெடுக்கலாம் என கூறியுள்ளனர்.

சட்ட உதவி அளிக்க வேண்டும்:

பாலியல் தொழிலாளி என்பதால் அவர் கொடுக்கும் பாலியல் புகார்களை எடுத்துக்கொள்ள கூடாது என அலட்சியமாக இருக்கக்கூடாது, அவர்களுக்கும் மருத்துவம் மற்றும் சட்ட உதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அடையாளங்களை வெளியிட கூடாது:

பாலியல் கூடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது, ஊடகங்களில் அதனை ஒலிபருப்பும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும் மீட்புப்பணியில் போது பாலியல் தொழிலாளியின் அடையாளங்கள் பெயர்கள் புகைப்படங்கள் ஆகியவை வெளியாகாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என சில முக்கிய உத்தரவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்