Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆளுநரிடம் கைதிகள் விடுவிப்புப் பட்டியல் - சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..!

Saraswathi Updated:
ஆளுநரிடம் கைதிகள் விடுவிப்புப் பட்டியல் - சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..! Representative Image.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் நீண்டகாலமாக உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கும் பட்டியல் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருப்பதாக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.   

சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும்  'சிறைச் சந்தை'யை சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மத்திய சிறைச்சாலையில் தயாரிக்கப்படுகிற பல்வேறு பொருட்களை விநியோகிக்கும் மற்றும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறையில் தயார் செய்யப்படும் இந்த பொருட்கள் மூலமாக சிறையில் இருக்கக்கூடிய கைதிகளின் குடும்பத்திற்கு உதவும் வகையில் இதை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு வரவேற்பு இருக்கிறது. அதை குறித்து ஆலோசனை செய்து மக்களுக்கு ஆன்லைன் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆன்லைன் ரம்மி தொடர்பான அதிகார அமைப்புக்குழு விரைவில் அமைக்கப்படும். அண்ணா பிறந்த நாளுக்கு 700 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் இதுவரை 460 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற சிறை கைதிகள் குறித்த ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சில கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவை மீண்டும் ஆளுநரின் மறுபரிசீலனைக்கும் அனுப்பப்படுகிறது. 

சிறைதுறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவலர்களுக்கு பணி உயர்வு அளிப்பது  குறித்து ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. விரைவில் அவர்களுக்கு பணி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள், வழக்குகள் பொறுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அளிக்கப்பட்ட  தண்டனையை பொறுத்தும் அவர்கள் விடுக்கப்படுவார்களா? என்பது குறித்து ஆலோசனை செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்' இவ்வாறு அமைச்சர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்