Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொன்னதை மட்டுமல்ல.. சொல்லாததையும்.. நான் செய்வேன்.. - கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Baskaran Updated:
சொன்னதை மட்டுமல்ல.. சொல்லாததையும்.. நான் செய்வேன்.. - கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!Representative Image.

மதுரை: ரூ.216கோடி மதிப்பில் சர்வதேச டிஜிட்டர் தரத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

பின்னர்  அவர் விழாவில்  பேசியதாவது, சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும், நான் செய்வேன் என்பதற்கு, எடுத்துக்காட்டு தான் சென்னையில் கருணாநிதி பெயரில் மருத்துவமனையும், மதுரையில் நுாலகமும். தமிழகத்தின் தலைநகர் சென்னை என்றால், கலைநகர் மதுரை. தலைநகரில், அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவின்போது, அவரது, பெயரில் கருணாநிதி நுாலகம் அமைத்து கொடுத்தார். தற்போது, கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், அவரது பெயரில், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை, இரண்டும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், நுாலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும். இந்நுாலகம் வாயிலாக, இனி அறிவுத்தீ பரவும். நுாலகம் பிரமாண்டமாக அமைய காரணமான அதிகாரிகள், ஊழியர்களுக்கு என் பாராட்டுக்கள். ஐ.டி., நிறுவனமான எச்.சி.எல்., நிறுவனர், அரசு பள்ளியில் படித்து, சொந்த முயற்சியில் நிறுவனம் துவங்கி, 2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளார். இலக்கியம், பத்திரிகை, சினிமா என, அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி. அவரே, ஒரு நுாலகம் தான்.

தி.மு.க., என்பது அரசியல் மட்டுமல்ல, அறிவு இயக்கம். கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திட்டங்கள், கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. தி.மு.க., ஆட்சியில் தான், கல்வி புரட்சி உருவானது. காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக, கருணாநிதி தான் அறிவித்தார்.

தி.மு.க., முதல்முறை ஆட்சிக்கு வந்தபோதே, ஏராளமான கல்லுாரிகள் உருவாக்கப்பட்டன. தரமான கல்வி வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.முதலிடத்தை பிடிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிக்கும்போது கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நாளைய எதிர்காலம் நீங்கள் தான். இவ்வாறு, அவர் பேசினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்