Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுரையின் மற்றொரு அடையாளமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Baskaran Updated:
மதுரையின் மற்றொரு அடையாளமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! Representative Image.

மதுரை: ரூ.216 கோடி மதிப்பில் சர்வதேச டிஜிட்டல் தரத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பில் 2.13 லட்சம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டும் பணிகள் தொடங்கி இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் கலைநயமான நுழைவு வாயில், வண்ணமையமான வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு தளங்கள், கலைஞர் சிரித்த முகத்துடன் அவரது உருவம் கொண்ட ஜெர்மன் தொழில்நுட்பத்திலான கண்ணாடி முகப்பு, புத்தகம் படிக்க அமைதியான அறைகள், 2.50லட்சம் புத்தகங்கள் என மதுரை மக்களுக்கு அனைத்து ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

வாகன நிறுத்துமிடம், நாளிதழ்கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவு கொண்ட அடித்தளம், கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், விஐபி அறை, சொந்த நூல் படிக்கும் அறை, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, தபால் பிரிவு உள்ளிட்டவை தரைத்தளத்தில் உள்ளது.  
கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் நுாலகம், சொந்த நுால்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு கொண்ட முதல்தளம், தமிழ் நுால்கள் பிரிவு கருணாநிதியின் நினைவை போற்றும் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கியதாக இரண்டாம் தளம் அமைந்துள்ளது.

மூன்றாவது தளத்தில் ஆங்கில நுால்கள், ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நுால்கள் பிரிவுகள், நான்காவது தளத்தில் 30 ஆயிரம் புத்தகங்களுடன் போட்டித் தேர்வர்களுக்கான பிரிவு, ஐந்தாம் தளத்தில் அரிய வகை நுால்கள், மின் நுாலகம், பல்லுாடகம், ஒளி ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நுால், ஒலி நுால் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைந்துள்ளன.

ஆறாவது தளத்தில் ஆங்கில நுால்கள் (இரவல் பிரிவு), நுால் பகுப்பாய்வு, நுால் பட்டியல் தயாரித்தல், நுாலக நிர்வாகம், நுால்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தின் உட்பகுதிகளில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, ஆறு மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள், வளாகத்தின் நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகை கண்ணாடி பேழையிலான 'ஹைடெக்' கூடாரம் என நுாலகம் ஜொலிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்