Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு பரிசு.. அஜ்மீர் நபரின் சர்ச்சை வீடியோ!!

Sekar July 05, 2022 & 14:56 [IST]
நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு பரிசு.. அஜ்மீர் நபரின் சர்ச்சை வீடியோ!!Representative Image.

ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த ஒருவர் முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு வெகுமதியாக தனது வீடு மற்றும் சொத்துக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என்றும் இவர் அஜ்மீர் தர்காவின் காதிம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், நுபுர் ஷர்மாவின் தலையை யாரேனும் கொண்டு வருபவர்களுக்கு தனது வீட்டையும் சொத்துக்களையும் தருவதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. 

நாடு முழுவதும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவதாக அவர் தனது வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ வைரலானதை அடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) விகாஸ் சங்வான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த வீடியோ தொடர்பாக காவல்துறை நிர்வாகத்தின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பாக இருக்கும். வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் காணப்படுகிறார். இது தொடர்பாக, தர்கா மற்றும் அஞ்சுமான் அதிகாரிகளிடமும் போலீசார் பேசினர். இந்த வீடியோ வைரலாவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட சல்மான் சிஷ்டி தர்கா காவல் நிலைய பகுதியில் வசித்துவரும் நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோவை அடுத்து தலைமறைவாகிவிட்டார். போலீசார் சல்மானை தேடி வருகின்றனர்.

முன்னதாக ஜூன் 28 அன்று, உதய்பூரின் மால்தாஸ் தெரு பகுதியில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் முகமது எனும் இருவர் தையல்காரர் ஒருவரை தலை துண்டித்து கொடூரமாக கொன்ற நிலையில், தற்போது இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்