Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகுல் காந்தி குறித்து பொய்யான வீடியோ.. பத்திரிகையாளரை கைது செய்த உ.பி.காவல்துறை!!

Sekar July 05, 2022 & 12:57 [IST]
ராகுல் காந்தி குறித்து பொய்யான வீடியோ.. பத்திரிகையாளரை கைது செய்த உ.பி.காவல்துறை!!Representative Image.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்த தவறான காட்சிகளை ஒளிபரப்பியதாக ஜீ டிவி செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் இன்று காலை உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்தை உதய்பூர் தையல்காரரின் வீடியோவில் குறிப்பிடுவது போல் காட்டுவதன் மூலம் பொய்யை பரப்பியதாக தொகுப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை விசாரணைக்கு அழைக்க ஒரு குழு ரஞ்சனின் வீட்டிற்கு சென்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை எடிட் செய்து பரப்பிய வீடியோ தொடர்பாக தங்கள் ஊழியர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு செய்தி சேனல் கோரியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரபிரதேச காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

“ஐபிசி பிரிவு 505 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரஞ்சன் இருப்பதால், அவர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சத்தீஸ்கர் போலீசாரும் வந்திருந்தனர் ஆனால் எங்கள் குழு ஏற்கனவே ரஞ்சனை கைது செய்திருந்தது." என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரின் காவல்துறை அதிகாரிகளும் ரஞ்சனை கைது செய்ய உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு குவிந்தனர். 

முன்னதாக, சத்தீஸ்கர் போலீசார் குவிந்ததால், உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் என்னைக் கைது செய்ய சத்தீஸ்கர் காவல்துறை என் வீட்டிற்கு வெளியே நிற்கிறது, இது சட்டப்பூர்வமானதா என்று பத்திரிகையாளர் ரஞ்சன் இன்று காலை ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த காசியாபாத் போலீசார், "இந்த விவகாரம் உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திராபுரம் போலீசார் சம்பவ இடத்தில் தான் உள்ளனர், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்