Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்வான் மோதல் குறித்த தகவல் தரமுடியாது.. ஆர்டிஐ ஆர்வலருக்கு அதிரடி உத்தரவு!!

Sekar July 30, 2022 & 13:22 [IST]
கல்வான் மோதல் குறித்த தகவல் தரமுடியாது.. ஆர்டிஐ ஆர்வலருக்கு அதிரடி உத்தரவு!!Representative Image.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோதலில் சீன ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை வெளியிட முடியாது என மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.

அதன் சமீபத்திய உத்தரவில், ஜூன் 15, 2020 அன்று இரு படைகளுக்கு இடையே நடந்த மோதலின் போது, நாட்டின் துணிச்சலான வீரர்களால் சீனப் படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏதேனும் இருந்தால் அதை அறியும் கோரிக்கையை அனுமதிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் உயர்மட்ட மேல்முறையீட்டு அமைப்பாக சிஐசி உள்ளது. மே 5, 2020 அன்று இரு தரப்பு துருப்புக்களுக்கும் இடையே நடந்த மோதலுக்குப் பிறகு ஜூன் 15இல் கிழக்கு லடாக்கில் மிகப்பெரிய மோதல் வெடித்தது. இது குறித்த தகவலை கோரி அகந்த் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, மூலோபாயம், அறிவியல் அல்லது பொருளாதார நலன்கள் ஆகியவற்றில் பாரபட்சமாக பாதிக்கும் தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும் ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(a) ஐயும் ராணுவம் மேற்கோள் காட்டி தகவல் தர மறுத்தது.

இதையடுத்து விண்ணப்பதாரர் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிட்டார். இந்நிலையில், இந்த விஷயத்தில் விண்ணப்பதாரர் கோரும் தகவலை ராணுவம் தர முடியாது என மறுத்தது சரி தான் எனக் கூறி அகந்தின் மனுவை நிராகரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்