Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திமுக - பாஜக கூட்டணியா..? முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்...!

madhankumar July 30, 2022 & 13:15 [IST]
திமுக - பாஜக கூட்டணியா..? முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்...!Representative Image.

செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார், அப்போது திமுக - பாஜக கூட்டணி வைக்கப்போவதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில் கேரளாவின் மனோரமா செய்தி நிறுவனம் நடத்தும் கான்க்லேவ் 2022 நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வழியாக உரையாற்றினார்.  அந்த உரையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, “ கொரோனா தொற்றினால், பயணத்தை தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறியதால் தன்னால் அங்கு வரமுடியவில்லை என்பதை மலையாளத்தில் பேசினார்,

அப்போது இந்தியாவின் கூட்டாட்சி முறை குறித்து, நாட்டின் முதல் பிரதமர் நேரு,தொடர்ந்து பேசினார். நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ, மொழி  வாரி மாநிலங்களை நேரு ஏற்படுத்தி தந்தார் என கூறினார். மேலும் அது தற்போது நடக்கும் ஆட்சியில் கடைபிடிக்கப்படுவது இல்லை, நாடாளுமன்றத்தில் முக்கிய பொருள்கள் குறித்து பேசுவதற்கு, எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம் ஆகும். இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் தமிழகம் வந்ததையடுத்து திமுக - பாஜக கூட்டணி என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படி ஒன்று இல்லை திமுகவிற்கு சிபிஎம் உடனான கூட்டணி தொடரும். எங்கள் இரு கட்சிகளுக்கிடையேயான கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல.கொள்கைக்கான கூட்டணி. நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்