Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் இல்லை' - டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு..!

Saraswathi Updated:
'தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் இல்லை' - டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு..! Representative Image.

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் எந்தவித காவல் நிலைய மரணமும் நிகழவில்லை என்று சட்டம்-ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பு வகித்து வரும் டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையொட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் அலுவலகம் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.  இதில், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் ஏராளமான அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.  

விழாவில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு,  கடந்த 8 மாதங்களில் காவல் நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை. மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு  அளித்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதேபோல், காவல்துறைக்கும் வழக்கறிஞருக்கும் இடையேயான ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மிருகங்களை போன்ற பலமில்லாதவர்கள் மனிதர்கள். ஆனால் ஒத்துழைப்பு மூலம் அவற்றை கூண்டுக்குள்ளும் மிருகக்காட்சி சாலைக்கும் கொண்டுவர முடியும். இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு கெடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மனிதநேயத்துடன் காவல் துறை பொதுமக்களிடம் நடக்க வேண்டும் என்பதற்காக 2300 காவல்நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் புகார்கள் பெறப்பட்டன. இன்றைய காலக்கட்டத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களை தட்டிக் கொடுத்து பாராட்டி வேலை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே காவல்துறை இணைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,000ஆக இருந்து தற்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரமாக குறைந்துள்ளது. காவல்துறையின் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் ஏராளமானோர் காவல்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 2 வருடங்களில் 1000 உதவி காவல் ஆய்வாளர்கள் வேலைக்கு சேர்ந்துள்ள நிலையில் 444 உதவி காவல் ஆய்வாளர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேல் காவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30% பேர் பொறியாளர்கள். 

இதன் மூலமாக கடந்த காலங்களில் காவல்துறையில் எதிர்மறையாக நடைபெற்ற நிகழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்  கடந்த 8 மாதங்களில் காவல்நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை. அதேபோல்,  காவலர்கள் துன்புறுத்துவதாக வந்த புகார்களும் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்