Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம்.. இது எனது தார்மீக கடமை.. அமைச்சர் ஜெய்சங்கர் நச்!!

Sekar August 17, 2022 & 11:48 [IST]
ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம்.. இது எனது தார்மீக கடமை.. அமைச்சர் ஜெய்சங்கர் நச்!!Representative Image.

இந்தியர்களால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க முடியாது என்றும், அதனால் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

9வது இந்தியா-தாய்லாந்து கூட்டுக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவும் ஜெய்சங்கர் நேற்று தாய்லாந்து சென்றிருந்தார். 

இந்த தருணத்தில் இந்தியாவும் தாய்லாந்தும் தூதரக உறவுகளை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அங்கு பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "நாங்கள் எங்கள் நலன்களைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கிறோம். 2000 அமெரிக்க டாலர் தனிநபர் வருமானம் கொண்ட நாடு எங்களுடையது. எங்கள் மக்கள் அதிக விலை கொடுத்து எரிசக்தியை வாங்கக்கூடியவர்கள் அல்ல. அவர்களுக்காக சிறந்த ஒப்பந்தத்தை உறுதி செய்வது எனது தார்மீக கடமை." என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்