Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுவிசர்லாந்தில் நடந்த முதல் தன்பாலின ஈர்ப்பு திருமணம்...!

madhankumar July 02, 2022 & 16:44 [IST]
சுவிசர்லாந்தில் நடந்த முதல் தன்பாலின ஈர்ப்பு திருமணம்...!Representative Image.

சுவிசர்லாந்து நாட்டில் முதன் முறையாக தன் பாலின இருப்பு திருமணம் நடந்துள்ளது. இதற்கு அந்த நாட்டு மக்கள் வெகுவாக வரவேற்பளித்து வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் 9 மாதங்களுக்கு முன்னர் அனைவருக்கும் திருமணம் ('Marriage for All' law) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பொதுமக்களில் 64% பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து அங்கு தன் பாலின ஈர்ப்பு திருமணம் நடந்துள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, முதல் முறையாக ஜூன் 1 அன்று தன் பாலின இணையர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அலின், லாரே ஆகியோர் சுவிட்சர்லாந்தில் இந்த முறைப்படி முதலில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினராக அறியப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் 21 ஆண்டு வருடங்களாக காதலில் இருந்திருக்கிறார்கள். இவர்களது திருமணத்தில் நூற்றுக்கணக்கான நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

தன் பாலின ஈர்ப்பு திருமணத்தை கடைசியாக ஏற்றுக்கொண்ட நாடக சுவிசர்லாந்து அறியப்படுகிறது. இதற்கு முதன் முதலில் அனுமதியளித்த ஐரோப்பிய நாடு நெதர்லாந்து ஆகும். "அனைவருக்கும் திருமணம்" சட்டத்தை கொண்டு வருவதில் சுவிட்சர்லாந்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. வலது சாரி அமைப்புகள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சுவிட்சர்லாந்து அரசு இதில் வெற்றி கண்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்