Mexico News Live : மெக்சிகோவை சேர்ந்த மேயர் ஒருவர் பெண் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹவுமெலுடா என்ற சிறிய நகரத்தின் மேயராக இருக்கும் விக்டர் ஹ்யூகோ சோசா என்ற நபர் சமீபத்தில் பெண் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன்படி, மெக்சிகோவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை கவுன் அணிவித்த முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அந்த முத்தமும் கொடுத்தார். இதனால் மேயரின் சில பாதுகாப்பு காரணங்களுக்காக முதலையின் வாயைக் கட்டியிருந்தனர்.
மேலும், இந்த நடைமுறை மெக்சிகோவில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக இயற்கையை வழிபடும் வகையில் நடத்தப்படும் ஹிஸ்பானிக் கால சடங்கு முறையாகும்.
இதுகுறித்து பேசிய மேயர் “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வளம் வேண்டி நாங்கள் இந்த சடங்கை மேற்கொள்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…