Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜகவால் ஓரம்கட்டப்படும் ஏக்நாத் ஷிண்டே...? மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!

madhankumar August 11, 2022 & 12:32 [IST]
பாஜகவால் ஓரம்கட்டப்படும் ஏக்நாத் ஷிண்டே...? மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!Representative Image.

மகாராஷ்டிராவில் மெகா விகாஸ் கூட்டணியிலான சிவசேனா ஆட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் பாஜகவின் தூண்டுதல் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.  அதன் பின்னர் பாஜகவுடன்  கூட்டணி அமைத்து ஜூன் 30ம் தேதி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்று கொண்டனர்.

அவர் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டு 40 நாட்கள் ஆகியும் இதுவரை அமைக்காரவி பதவியேற்றுக்கொள்ளாமல் இருந்தது. கடந்த வாரத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம் மட்டுமே அமைச்சர்கள் இல்லாமல் பங்கேற்ற ஒரே மாநிலம்.  அமைச்சரவை அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியையும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்து பதவியேற்ற உடனே பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் அமைச்சரவை அமைப்பது நிலுவையிலேயே இருந்தது.

அமைச்சரவையில் பெரும்பான்மை இடங்கள் முதலில் பாஜகவிற்கே ஒதுக்கப்பட்டிருந்தது.  பின்னர் துணை முதலமைச்சரின் கோரிக்கையின் அடிப்படையில் 50:50 என்ற நிலையில் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.  பாஜக சார்பில் 9 அமைச்சர்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா குழுவில் 9 அமைச்சர்களும் என இடஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அனைத்து அமைச்சர்களும் ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

ஏக்நாத் ஷிண்டேவின் கோரோய்கையை நிராகரித்த பாஜக தேவேந்திர பட்நாவிஸ் கோரிக்கையை மற்றும் ஏற்றுக்கொண்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் ஆட்சி கைப்பற்றும் திட்டம் நிறைவேறியதும் ஏக்நாத் ஷிண்டே ஓரங்கட்டப்படுகிறார் என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாத ஏக்நாத் ஷிண்டே குழு எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்