Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் சாவு...

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 11:45 [IST]
1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் சாவு...Representative Image.

பெங்களூரு தாவணகெரே மாவட்டம் மீயாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கங்காதர் (வயது 32) என்பவருக்கும், ரூபா பாய் (வயது 22) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரூபா தனது கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்துவந்துள்ளார். 

திருமணத்தின்போது கங்காதரின் பெற்றோர் ரூபாவின் பெற்றோரிடம் வரதட்சனையை கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் கொடுக்காததாகவும், ரூபாவிற்கு 3 கிராம் நகை குறைவாக போட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தினமும் அந்த குடும்பமே ரூபாவை வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரூபா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விஷம் குடித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சன்னகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்களுக்கு பிறகு தான் ரூபாவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட ரூபாவின் பெற்றோர் பதியடித்து மருத்துமனைக்கு வர, ரூபா இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரூபாவின் பெற்றோர், ரூபா கொலை செய்யப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சந்தேபென்னூர் போலீசார், ரூபாவின் உடலை கைப்பற்ரி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ரூபாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ரூபா மர்மமான முறையில் உயிரிழந்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், ரூபாவின் கணவர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை போலீசார் வலைவீசி தேடிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்