Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10, 11, 12 ஆம் வகுப்பு துணை தேர்வுகள் எப்போது....? விண்ணப்பிப்பது எப்படி..?

madhankumar June 27, 2022 & 16:52 [IST]
10, 11, 12 ஆம் வகுப்பு துணை தேர்வுகள் எப்போது....? விண்ணப்பிப்பது எப்படி..?Representative Image.

இன்று தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின, அதில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.27% அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்திருப்பதாகவும் அதே நேரத்தில் ,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில்,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வை எழுதும் மாணவர்கள் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி,https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி ஒன்றாக வெளியானது, இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 10,12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் எனவும்,12ம் வகுப்பு துணைத்தேர்வு  ஜூலை 25  முதல் – ஆகஸ்ட் 1 வரை  நடைபெறும். 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்