Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனரை தாக்கிய போதை ஆசாமிகள்..!

madhankumar May 17, 2022 & 11:08 [IST]
அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனரை தாக்கிய போதை ஆசாமிகள்..!Representative Image.

மயிலாடுதுறை அருகே உள்ள விராலூரில் இளைஞர்கள் சிலர் மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுனரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து சசித்தமல்லி சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநராக குமரேசன், நடத்துனராக பூவராகவன் ஆகியோர் இருந்துள்ளனர். சுமார் 60 பயணிகளுடன் சித்தமல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது பட்டவர்த்தி அருகே ஆலமரத்தடியில் கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து தண்ணீர் பீச்சியடித்து பேசுனதை காலால் உதைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பேருந்து சித்தமல்லி சென்று திரும்பும்போது 10 பெண் பயணிகளுடன் திரும்பி வந்துள்ளது அப்போது அந்த போதை இளைஞர் இருசக்கர வாகனங்களை சாலையில் நடுவே நிறுத்தி உள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கி சென்ற ஓட்டுநர் குமரேசன் வண்டியை எடுக்க சொல்லியுள்ளார், அதற்கு அந்த இளைஞர்கள் மாற்றுவழியில் செல்லவும் என கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை ஓட்டுநர் தனது செல்போனில் படம் எடுக்க அதனை பிடுங்கி சாலையில் எரிந்து உடைத்துள்ளனர் அந்த இளைஞர்கள்.

பின்னர் அங்கு மேலும் 7 இளைஞர்கள் வந்து மொத்தமாக 10 பேர் சேர்ந்து ஓட்டுனரை நெஞ்சு, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரை பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதோடு நிற்காமல் பேருந்தின் கண்ணாடியும் அந்த போதை இளைஞர்கள் உடைத்துள்ளனர். 

மருத்துவமனையில் இருக்கும் ஓட்டுனரும் பொதுமக்களும் அந்த இளைஞர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வரித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த 10 இளைஞர்களை தேடி வருகின்றனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்