Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

காப்பியடித்தை ஆசிரியர் கண்டித்ததால் 14வது மாடியிலிருந்து விழுந்து மாணவர் பரிதாப பலி…!

Manoj Krishnamoorthi November 09, 2022 & 15:30 [IST]
காப்பியடித்தை ஆசிரியர் கண்டித்ததால் 14வது மாடியிலிருந்து விழுந்து மாணவர் பரிதாப பலி…!Representative Image.

ஆசிரியர் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10 வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பரீட்சையில் பிட் அடித்ததைக் கண்டித்ததால் கோபம் கொண்டு மாணவர் இந்த முடிவு எடுத்துள்ளார், இது குறித்து மேலும் அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

காப்பியடித்தை ஆசிரியர் கண்டித்ததால் 14வது மாடியிலிருந்து விழுந்து மாணவர் பரிதாப பலி…!Representative Image

14வது மாடியிலிருந்து விழுந்து மாணவர் பரிதாப பலி

பெங்களூருவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மோஹின். இவர் பரீட்சையில் காப்பியடித்து எழுதும்போது ஆசிரியரிடம் மாட்டியுள்ளார். எனவே மோஹினை ஆசிரியர் கடுமையாக தண்டனை கொடுத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த மாணவன் நேற்று மாலை தன் வீட்டிற்கு செல்லும் வழியில் நாகவாரா என்ற பகுதியில் உள்ள 14 தள அடுக்கு மாடி குடியிருப்பு சென்றுள்ளான்.  அந்த 14 தள கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளான். 

எதிர்பாராத விதமாக கீழே விழாமல் மாடியில் உள்ள சுவற்றில் சிக்கி கொண்டான். இதை அறிந்து மோஹினை காப்பாற்ற குடியிருப்பு வாசிகள் மாடிக்கு சென்று, மோஹினை  காப்பாற்ற கை நீட்டினர். ஆனால்  தான் சிக்கி கொண்ட சுவற்றில் இருந்து விடுவித்து மோஹின் கீழே விழுந்தான். இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், இந்த அடுக்கு மாடி குடியிருப்பு எப்படி சிறுவன் சென்றான் என்றும், தற்கொலை குறித்தும் சம்பிகே ஹள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்