Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

10 வயது சிறுவனை பலாத்காரம் செய்த சிறுவர்கள்.. கொடூரமான முறையில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

Gowthami Subramani October 03, 2022 & 12:15 [IST]
10 வயது சிறுவனை பலாத்காரம் செய்த சிறுவர்கள்.. கொடூரமான முறையில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image.

டெல்லியில் உள்ள சீலம்பூர் குடிசைப் பகுதியில், 10 வயது சிறுவனை கூட்டு பலாத்காரம் செய்து, கொடுமையான முறையில் இயற்கைக்கு மாறான முறையில் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில், சீலம்பூர் குடிசைப் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவனை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 3 சிறுவர்கள் பலாத்காரம் செய்ததோடு, அவனது அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பியை வைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் மூவருமே, பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பர்களே ஆவர். இவர்களுக்கும் வயது 10 முதல் 12-க்குள் இருக்கும். பாதிக்கப்பட்ட சிறுவனை கடந்த செப்டம்பர் 18 ஆம் நாள் கிரிக்கெட் விளையாடுவதாகக் கூறி அவனை வெறிச்சோடிய ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின், அந்த சிறுவனை வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தி, அவனின் அந்தரங்க உறுப்புகளில் ஒரு தடியை வைத்து தாக்கியுள்ளனர்.

பிறகு எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்தடைந்த சிறுவன், பயத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளான். குடும்பத்தினர் கேட்ட போது, தகராறு நடந்ததாக மட்டும் தெரிவித்துள்ளான்.

அடுத்த நாள், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததைக் கண்டு குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வெளிவந்தது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மைனர் சிறுவர்களைப் போலீசார் கைது செய்தனர். பிறகு, தவறான நடத்தை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டின் உத்தரவுப் படி சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு மட்டுமல்ல, சிறுவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்