Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India : பிரதமர் மோடியின் தாயாருக்கு 100வது பிறந்தநாள்..!

Muthu Kumar June 16, 2022 & 13:15 [IST]
India : பிரதமர் மோடியின் தாயாருக்கு 100வது பிறந்தநாள்..!Representative Image.

India : இந்தியாவின் பிரதமர் மோடியின் தாயாரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சமீபத்தில் சிறப்பாக பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமரின் தயார் ஹிராபா மோடி எதிர்வரும் 18ம் தேதியில் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது 100வது பிறந்தநாளை கொண்டாட அவரது குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.

அதன்படி, பிரதமரின் தயாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமரின் சொந்த கிராமமான வாட்நகரில் உள்ள கோவில் ஹிராபா மோடியின் நலனுக்காக சிறப்பு வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், ஜூன் 18ம் தேதியன்று குஜராத்திற்கு  பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது, பிரதமர் மோடி தனது தாயாரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,.

மேலும், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பிரதமர் மோடியின் தயார் ஹிராபா மோடியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் மேயர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்