தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 17) வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை ஜூன் 17 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வரும் ஜூன் 20 ஆம் தேதி தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 20 நண்பகல் 12 மணிக்கு தெரிந்துகொள்ளலாம் எனவும் ஜூன் 20 காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையப்பக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…