Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனக்கு தானே ப்ளக்ஸ் வைத்துக்கொண்ட மாணவன்...!

madhankumar June 27, 2022 & 18:08 [IST]
தனக்கு தானே ப்ளக்ஸ் வைத்துக்கொண்ட மாணவன்...!Representative Image.

கேரளாவில் 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 31 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற்றது. இதன் முடிவுக்கு கடந்த 15 ஆம் தேதி வெளியாகியுள்ளது. கேரளாவில் இம்முறை தேர்ச்சி சதவீதம் 99.26 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் 0.21 சதவீதம் குறைவு ஆகும். 

தேர்வு எழுதிய  மாணவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 469 பேரில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 303 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். 44 ஆயிரத்து 363 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ + மதிப்பெண் பெற்றுள்ளனர். மலப்புரம் மாவட்டம் ஏ+ மாணவர்கள் 3 ஆயிரத்து 024 பேருடன் முதலிடத்தில் உள்ளது. கண்ணூர் 99.76 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா, கொடுமண் பகுதியைச் சேர்ந்த ஜிஷ்ணு என்ற மாணவன் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சியும் பெற்றுள்ளன. இதனையடுத்து தான் தேர்ச்சி பெற்றதை ப்ளக்ஸ் அடித்து தெருவில் வைத்துள்ளார். இது குறித்து அந்த மாணவனிடம் கேட்ட போது அணைத்து பள்ளிகளிலும் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் பேனர் மட்டும் வைப்பார்கள் அனால் பாஸ் ஆனவர்களுக்கு வைப்பதில்லை எனவே எனக்கு நானே வைத்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்