Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மெட்ரோ ஸ்டேஷனில் பர்த்டே பார்ட்டி.. வட இந்தியாவின் டிடிஎஃப் வாசன்? தட்டித் தூக்கிய போலீஸ்!!

Sekar July 10, 2022 & 09:26 [IST]
மெட்ரோ ஸ்டேஷனில் பர்த்டே பார்ட்டி.. வட இந்தியாவின் டிடிஎஃப் வாசன்? தட்டித் தூக்கிய போலீஸ்!!Representative Image.

வட இந்தியாவின் டிடிஎஃப் வாசன் என அழைக்கும் அளவிற்கு பிரபலமான யூடியூபர் கௌரவ தனேஜாவை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

டிடிஎஃப் வாசன்

சமீபத்தில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு ரிசார்ட்டில் நடத்தியபோது அவரது ஆயிரக்கணக்கான பாலோயர்கர்கள் அங்கு கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு அவர் பைக்கில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட மிக அதிவேகத்தில் சென்று அதை வீடியோவாக வெளியிட்டது சர்ச்சையானது. 

அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட கேட்கும் அளவிற்கு டிடிஎஃப் விவகாரம் சென்றது.

கௌரவ் தனேஜா

இந்நிலையில் வட இந்தியாவில் யூடியூபரும் சமூக ஊடகங்களில் பிரபலமாக அறியப்படுபவருமான கௌரவ் தனேஜா இன்ஸ்டாகிராம் மூலம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குக் வருமாறு பாலோயர்களிடம் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நொய்டா செக்டார் 51 மெட்ரோ நிலையத்தில் ஏராளமானோர் கூடியதால், மெட்ரோ அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. 

கௌரவின் வேண்டுகோளின் பேரில், நொய்டா செக்டார் 51 மெட்ரோ நிலையத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர். இந்த நிகழ்விற்கான டோக்கன்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதில் ரசிகர்கள் கௌரவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் அதிகமான காரணத்தால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

பின்னர் நொய்டா செக்டார் 49 போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளையும், கௌரவின் ரசிகர்களையும் சமாதானப்படுத்தினர். நூற்றுக்கணக்கான மக்கள் கௌரவை பார்க்க மெட்ரோ வளாகங்கள் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் குவிந்திருப்பதை வைரல் வீடியோக்கள் காட்டுகின்றன.

மெட்ரோ சேவை பாதிப்பு

கௌரவ் மற்றும் அவரது ரசிகர்களின் ஸ்டண்ட் காரணமாக, மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். திடீரென ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால், மெட்ரோ ரயில் மூலம் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மெட்ரோ ஊழியர்களும் மிகவும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. 

கௌரவ் கைது

 களேபரத்தால் அங்கு 144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு கூட்டத்தை கலைத்ததோடு விதிகளை மீறியதற்காக கௌரவ் காவலில் வைக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 241 (தவறான தடைக்கான தண்டனை) மற்றும் பிரிவு 188 (ஒரு பொது ஊழியரால் சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்ட உத்தரவை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் பின்னர் கைது செய்யப்பட்டார்.

எனினும் கவுரவ் கைது செய்யப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கௌரவ் தனேஜா யார்?

பிரபலமான யூடியூபர், முன்னாள் பைலட் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் எனக் கூறிக்கொள்ளும் கௌரவ் தனேஜா, காரக்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் படித்தவர் ஆவார். தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார். 

கௌரவ் தற்போது இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது ஃப்ளையிங் பீஸ்ட், ஃபிட் மஸ்கிள் டிவி மற்றும் ராஸ்பரி கே பாபா ஆகிய மூன்று யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். அவற்றில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் மற்றும் அவரது தினசரி வாழ்க்கை வ்லாக் மற்றும் நேரடி ஸ்ட்ரீம்களை கௌரவ் பதிவேற்றி வருகிறார். 

மேலும் மும்பைகர் நிகில், புவன் பாம் மற்றும் டெக்னிக்கல் குருஜி போன்ற பல பெரிய யூடியூபர்களுடன் அவர் இணைந்து செயல்படுவதோடு. பாலிவுட் பிரபலங்களுக்கான விளம்பரங்களையும் அவர் படமாக்கி வருகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்