Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம்...எதற்கு தெரியுமா?

madhankumar May 26, 2022 & 17:34 [IST]
ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம்...எதற்கு தெரியுமா?Representative Image.

ட்விட்டர் பயனர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக ட்விட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்த நிறுவனத்திற்கு ரூ.1,165 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

230 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் , பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் மொபைல் எண், இமெயில் முகவரியை சேமித்து வைக்கும் என துவக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ட்விட்டர் நிறுவனம்  கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது ட்விட்டருக்கு எதிராக வாதாடிய பெடரல் டிரேட் கமிஷன், ‛ட்விட்டரை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றது தவறு. இந்த வியாபாரத்தால் ட்விட்டர் பல மடங்கு லாபத்தை பெற்றதாக வாதாடியது. இதனையடுத்து, பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1165 கோடி) அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராத தொகையை செலுத்த ட்விட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்