Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலவர பூமியான கால்பந்து மைதானம்.. 129 பேர் பலியான பரிதாபம்!!

Sekar October 02, 2022 & 11:26 [IST]
கலவர பூமியான கால்பந்து மைதானம்.. 129 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவில் ஏற்பட்ட கலவரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 129 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் மலாங் ரீஜென்சியில் நடந்த கால்பந்து போட்டியில் ஜாவானீஸ் கிளப்களான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயாவின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

கிழக்கு ஜாவா போலீஸ் தலைவர் நிகோ அஃபின்டா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இந்த சம்பவத்தில், 129 பேர் இறந்தனர், அவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் இறந்தனர்.

மோதல் வன்முறையாக மாறியது. அவர்கள் அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர், அவர்கள் கார்களை சேதப்படுத்தினர்." என்று தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் வெளியேறும் வாயிலுக்கு ஓடியபோது நெரிசலில் பலர் சிக்கிக்கொண்டதாகவும் கூறினார்.

தங்களது அணி தோல்வியடைந்த பிறகு ஆயிரக்கணக்கான அரேமா ரசிகர்கள் களத்தில் இறங்கியபோது சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது. அரேமா அணியின் ஆதரவாளர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்ததால், காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் (பிஎஸ்எஸ்ஐ) ஆட்டத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையைத் தொடங்க ஒரு குழு மலாங்கிற்கு புறப்பட்டுச் சென்றதாகக் கூறியது.

இந்தோனேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்