Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே கிராமத்தை சேர்ந்த 14 பேரின் உயிரை பறித்த கள்ளச்சாராயம்..

Nandhinipriya Ganeshan Updated:
ஒரே கிராமத்தை சேர்ந்த 14 பேரின் உயிரை பறித்த கள்ளச்சாராயம்..Representative Image.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 13ஆம் தேதி இரவு மரக்காணம் இ.சி.ஆரில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதனால், 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 14 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

தற்போது 37 பேருக்கும் மேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

இதையடுத்து, அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். அதாவது, விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.,க்கள் உட்பட பல போலீஸ் அதிகார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வழக்கு சி.பி.சி.ஐ க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், டி.ஜி.பி உத்தரவில், வெறும் இரண்டே நாட்களில் 1,558 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்