Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரானார் அஜித் பவார்: அரசியலில் பரபரப்பு திருப்பம்

Baskarans Updated:
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரானார் அஜித் பவார்: அரசியலில்  பரபரப்பு திருப்பம்Representative Image.

மும்பை: மகாராஷ்டிரா எதிர்கட்சி தலைவர் ஆளும் பாஜகவில் இணைந்து துணை முதல்வராக பதவியேற்றுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை சில கட்சித் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை மும்பையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பின்னர் மற்ற கட்சித் தலைவர்களுடன் ராஜ்பவன் சென்றடைந்தார். எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதில் விருப்பம் இல்லை என்றும் கட்சி அமைப்பில் பணியாற்ற விரும்புவதாகவும் அஜித் பவார் சமீபத்தில் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். இந்த அறிவிப்பின்  போது அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில், கட்சியில் உட்கட்சி மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 26பேருடன் பாஜகவில் இணைந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவின் பட்னாவிசுடன் இணைந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதற்கு தேசியவாத காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 8மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் தேசியவாத காங்கிரசிலேயே இணைந்தார்.

தற்போது மீண்டும் அவர் துணை முதல்வர் பதவி ஏற்பது 8வது முறையாகும்.எந்தவித முன்னெறிவிப்பு இல்லாமல் பாஜகவில் அவர் இணைந்திருப்பது தேசியவாத காங்கிரஸூக்கு பெரும் இழப்பாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்