Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகள் வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டுக்காரர்..

Nandhinipriya Ganeshan October 10, 2022 & 12:43 [IST]
மகள் வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டுக்காரர்.. Representative Image.

நீலகிரியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு மற்றும் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனை சுதாரித்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியை பரிசோத்த டாக்டர், மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

தனது மகள் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனே, காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பக்கத்துவீட்டுக்காரரின் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதேபகுதியை சேர்ந்த சேகர் என்பவர் அழகுத்தாவரங்களை விற்பனை செய்யும் நர்சரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் அந்த மாணவியின் பக்கத்துவீட்டுக்காரரும் கூட. இவர் அம்மாணவியை அவ்வப்போது தனது காரில் அழைத்து வந்த பள்ளியில் விட்டிருக்கிறார். இதை நம்பிய மாணவியின் பெற்றோரும் சேகருடன் அடிக்கடி காரில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட சேகர், அந்த சிறுமியிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறார். இதை பற்றி வெளியில் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டி வைத்துள்ளார். மாணவியும் பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். 

இது தற்போது 8 மாத கர்ப்பத்தில் வந்து நின்றுள்ளது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், தனது மகள் வயது இருக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்