Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை சிறையில் இருந்த 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை.. அதுவும் நிபந்தனையோட..

Nandhinipriya Ganeshan November 17, 2022 & 15:14 [IST]
இலங்கை சிறையில் இருந்த 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை.. அதுவும் நிபந்தனையோட.. Representative Image.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 15 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அந்த 15 மீனவர்களும் கடந்த 7-ந் தேதி மன்னாரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 17 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று சிறையில் அடைக்கப்பட்ட 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதாவது, 10 ஆண்டுகள் இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை மீறினால், 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்