Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு...ஒரு பய ஏமாத்த முடியாது...சேத்து ஆதாரையும் EB-யையும்!

Priyanka Hochumin November 17, 2022 & 13:34 [IST]
மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு...ஒரு பய ஏமாத்த முடியாது...சேத்து ஆதாரையும் EB-யையும்!Representative Image.

தொடர்ந்து நடைபெறும் மின்சார முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது அவசியம் என மின்சார வாரியம் அதிரடி தகவலை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு வீட்டின் மின்சார கணக்கெடுப்பு எடுக்கப்படும். அதற்கு ஏற்ப மக்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் அதில் நிறைய முறை கேடுகள் நடப்பதாக பொது மக்கள் புகார் அளித்து வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது அவசியம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு நீங்கள் மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை ஓபன் செய்யுங்கள். அங்கு தற்காலிகமாக சோதனை ஓட்ட முறைப்படி லிங்க் ஒன்றை மின்சாரத் துறை வடிவமைத்துள்ளது. இதில் முறைகேட்டை தடுப்பது முக்கியம் என்றால், இதனை பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொண்ட நுகர்வோர்கள் கண்டறிய முடியும். அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இது யார் யாருக்கெல்லாம் அவசியம் என்றால் - 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் அனைவரும் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.

யாருக்கு அவசியம் இல்லை என்றால் - தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்