Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்...வீடியோ வெளியானதால் பரபரப்பு..!

madhankumar August 03, 2022 & 13:04 [IST]
சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்...வீடியோ வெளியானதால் பரபரப்பு..!Representative Image.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தனது நண்பர்களை வைத்து வீடு புகுந்து கடத்தி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தஞ்சை, ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் விக்னேஸ்வரன். (வயது 34). மயிலாடுதுறையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு விக்னேஸ்வரன் சென்றிருந்த போது அந்த பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவருடன் விக்னேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல விக்னேஸ்வரன் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம்பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் அவரை காதலிப்பதாக தொடர்ந்து விக்னேஸ்வரன் தொந்தரவு செய்துவந்துள்ளார்.

இது குறித்து 2 முறை எழுந்த புகாரின் பேரில் விக்னேஸ்வரனை அழைத்து போலீசார் கண்டித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று அறிவுரைகள் கூறியும், எழுதி வாங்கிக்கொண்டும் விக்னேஸ்வரனை எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

போலீசார் எச்சரித்தும் காதல் போதை தீராத விக்னேஸ்வரன் கடந்த 12ஆம் தேதி இளம்பெண்ணை அஃடாத முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பெண் தப்பி சென்று மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு சென்று எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தார். 

இந்நிலையில் இளம்பெண் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 15 பேர் பைக் மற்றும் காரில் சென்று இறங்கினார்கள். அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. திடீரென அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் பதறிய அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், தகவல் அறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையிலான போலீசார் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். 

மேலும் சிசிடிவி அடிப்படையில் நடத்திய விசாரணையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணை கடத்தி சென்ற விக்னேஷ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கும்பலாக வந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்