Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னங்க இது மீன்-ஆ இல்ல விண்மீன்-ஆ இவ்வளவு நீளமா இருக்கு...!

madhankumar July 15, 2022 & 13:20 [IST]
என்னங்க இது மீன்-ஆ இல்ல விண்மீன்-ஆ இவ்வளவு நீளமா இருக்கு...!Representative Image.

சிலி நாட்டில் உள்ள ஒரு கடற்கரையில் மீனவர்கள் 16அடி நீளமுள்ள ராட்சத மீன் ஒன்றை கிரேன் உதவியுடன் தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் ஆழ்கடலில் மட்டும் வாழும் இந்த மீன் கடற்கரை ஓரத்தில் பிடிபட்டுள்ளதால் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

ஓர்ஃபிஷ் என அழைக்கப்படும் இந்த மீன் துடுப்புகள் நீளமாகவும், சதைபிடிப்பற்ற நீளமான உடல் அமைப்புடன் காணப்படும். உலகின் மிக நீண்ட மீன் இனங்களில் இந்த துடுப்பு மீனும் ஒன்றாகும். இது சுமார் 36 அடி நீளம் வரை வளரக்கூடியதாகும். தற்போது கரை ஓரத்தில் இந்த மீன் தென்பட்டுள்ளது எனவே நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என நெட்டிசன்கள் புரளியை கிளப்பி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கும்போது ஓர்ஃபிஷ் கடலின் கரைபகுதியில் தென்படுவது நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி ஏற்படுவதை குறிக்கும் என்று இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, இறக்கும்போது அல்லது இனப்பெருக்க காலத்தில் கடலின் மேற்பரப்புக்கு வருவது இயல்பானதுதான். எனினும், இந்த மீன்கள் நம் கண்களின் தென்படுவது அரிதான ஒன்றே என கூறுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்