Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி....தண்ணீர் பாட்டிலை வச்சு விளையாடுற இடமா அது...?

madhankumar July 20, 2022 & 11:51 [IST]
அதிர்ச்சி....தண்ணீர் பாட்டிலை வச்சு விளையாடுற இடமா அது...? Representative Image.

ஈரான் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக எதுவும் சாப்பிட முடியாமல் இருந்துள்ளார். இதனை கவனித்த அவரது மனைவி ஈரானில் உள்ள இமாம் கொமேனி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் முதலில் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மிகவும் சங்கடமாக போய்விடும் என நினைத்து மனைவியிடமோ, மருத்துவரிடமோ கூறாமல் மறைந்துள்ளார். விஷயம் என்னவென தெரிந்தால் தான் சிகிச்சை அளிக்கமுடியும் என நினைத்த மருத்துவர், அவருக்கு CT ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

அதனை பார்த்த மருத்துவர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை, காரணம் அவர் தன்னுடைய ஆசன வாய் வழியாக 19 செ.மீ அளவுள்ள தண்ணீர் பாட்டிலை சொருகி வைத்துள்ளார். அதனை எளிதாக வெளியே எடுத்து விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் அது குடலில் சிக்கியதால் காரணமாக வெளியே எடுக்கமுடியாமல் போயுள்ளது.

இதன் காரணமாக ஏதும் சாப்பிட முடியாமல், வெளியே கூற முடியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்கு பின்னர் ஆசன வாயில் இருந்த தண்ணீர் பாட்டில் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை தரப்பில் எதற்காக அவர் தண்ணீர் பாட்டிலை உள்ளே நுழைத்தார் என்பது குறித்து தெரியப்படுத்தவில்லை. பாலியல் ரீதியாக சிலர் இவ்வாறு செய்வார்கள் என கூறிவருகின்றனர் சிலர்.

இதனையடுத்து 3 நாட்களுக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவருக்கு மனநல மருத்துவரை சென்று பாருங்கள் என ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்