Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை அதிபர் தேர்தல்....இன்று நடைபெறும் வாக்கெடுப்பு..!

madhankumar July 20, 2022 & 10:10 [IST]
இலங்கை அதிபர் தேர்தல்....இன்று நடைபெறும் வாக்கெடுப்பு..!Representative Image.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையே மக்களின் போராட்டங்கள் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்க்ஷே இலங்கையில் இருந்து தப்பி சென்று சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். பின்னர் அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இடைகால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்தார். தற்போது அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது.

இந்த அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார், இதனையடுத்து இந்த நாட்டின் நலனுக்காகவும் நாட்டில் வசிக்கும் மக்களின் நலனுக்காகவும் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் எதிர்க்கட்சியின் சார்பில் தல்லாஸ் அலகப்பெருமாவை அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக அறிவித்தார்.

பிரேமதாசா விலகலை தொடர்ந்து இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை.

தற்போது நிலவி வரும் இந்த சூழ்நிலையில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் எம்பிகளில் பெரும்பாலானோர் தல்லாஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். தல்லாஸ் அலகப்பெருமாவை அதிபராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராகவும் தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ரணில் விக்ரமசிக்கே அதிபராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடந்துவருகின்றன.

1993- ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இடைக்கால அதிபரை தேர்வு செய்வது இதுவே முதல் முறை ஆகும். மேலும் 1993-ல் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் டி.பி.விஜேதுங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்படுபவர் 28 மாதங்கள் அப்பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்