Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

சீறிப்பாய்ந்த காளைகள்; ஆட்டம் காட்டிய காளையர்கள் - அனல் பறந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு!

KANIMOZHI Updated:
சீறிப்பாய்ந்த காளைகள்; ஆட்டம் காட்டிய காளையர்கள் - அனல் பறந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு! Representative Image.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நல்ல முறையில் நிறைவடைந்தது. 

 

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் சிறந்த மாடுபிடி வீரராகவும் தஞ்சாவூர் மாவட்டம் மருதங்குடி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருடைய மாதர் என்ற காளை ராஜ்குமார் பெயரில் அவிழ்க்கப்பட்ட நிலையில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 8ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி  2.20 மணியுடன் நிறைவடைந்தது.


காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 485 காளைகள் களம் கண்ட நிலையில் ஒரு சுற்றுக்கு 25 பேர் விதம் 6 சுற்றுக்களாக காளையர்கள் களம் இறக்கப்பட்டனர். இந்நிலையில் காலை முதலே காளைகளை தழுவிய வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு வகையான பரிசுகளும் ரொக்க தொகையும் வழங்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் போட்டி தொடங்கியது முதல் முடிவடையும் வரை வாடிவாசலில் நின்று சிறந்த முறையில் 17 காளைகளை தழுவிய புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் பகுதியைச்சேர்ந்த யோகேஷ்  சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஸ்பிளண்டர் பைக் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

 

மேலும் இதில் தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி குமார் என்பருடைய மதார் என்ற காளை ராஜ்குமார் பெயரில் அவிழ்க்கப்பட்ட நிலையில் அந்த  காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 

 

போட்டியின் போது பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஆரோக்கிய ராணி உட்பட 74 பேர் காயமடைந்த நிலையில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர். 

 

வாடிவாசலில் அவிழ்க்கப்படாத 20க்கும் மேற்பட்ட காளைகள் போட்டி நிறைவடைந்த பிறகு வீரர்கள் இன்றி வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது. அப்போது பார்வையாளர்களும் காளைகளின் உரிமையாளர்களும் வாடிவாசலுக்கு முன்பு காளைகளை தழுவ முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் காயம் ஏற்படும் என்று கூறி அவர்கள் அனைவரையும் கலைந்து போக சொல்லி அறிவுறுத்தினர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்