Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது;  900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு! 

KANIMOZHI Updated:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது;  900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு! Representative Image.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி உள்ளிட்டோரும் பங்கேற்பு.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறப்பாக சீறிப்பாயும் காளைக்கும், அதனை அடக்கும் சிறந்த மாடுவீரர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

மாடுபிடி வீரர்களுக்கு அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வளர்மதி தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி  வீரர்கள் முதலில் தனக்கு கொரோனா இல்லை என்ற சான்றுடனும், இரண்டு தவணை கொரேனா தடுப்பூசி போட்டதற்கான ஆவணத்தை நகல் கொண்டு வந்திருக்கவேண்டும், ஆதார் கார்டு நகல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட டோக்கன் கொண்டுவர வேண்டும்.


பின்னர் மது அருந்தியுள்ளார்களா என காவலர்கள் கருவிகள்  மூலம் பரிசோதனை செய்வர். அதனைத் தொடர்ந்து 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் அனுமதிக்கப்படுவர், போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர் எடை 50 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்

.

உடலில் காயங்கள் ஏதும் இருக்ககூடாது  உடலில் ரத்த அழுத்த அளவு சரிபார்க்கப்படும்.  அதே போல் வீரர்களின் உயரம் 150 செ.மீ. இருக்க வேண்டும். இதில் வீரர்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் போட்டியில் அனுமதிக்கப்பட்டு வருவாய்துறையினர் மூலம் வரிசை எண் கொண்ட பனியன் வழங்கப்படும். 

.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு கலர் பனியன் மாற்றி போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வீரர்களுட்டு காலை உணவு இட்லி, பொங்கல் வழங்கப்பட்டு உண்டபிறகு போட்டியில் பங்குபெறுவார்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மொத்தம் 9 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்