இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் எளிதில் பணம் பெறும் வகையில் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான அளவை வங்கிகள் நிர்ணயித்துள்ளன. அதன்படி, கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 3 முறையும் சேவை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு மேல் ஒவ்வொரு முறையும் பணம் எடுத்தால் சேவைக் கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த சேவைக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…