Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் போராட்டம்.. பஞ்சாபிலிருந்து கிளம்பிய விவசாயிகள்!!

Sekar August 17, 2022 & 19:16 [IST]
மீண்டும் போராட்டம்.. பஞ்சாபிலிருந்து கிளம்பிய விவசாயிகள்!!Representative Image.

சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில் மத்திய அரசுக்கு எதிரான 72 மணி நேர போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாபிலிருந்து விவசாயிகள் இன்று உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரிக்கு புறப்பட்டனர். 

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் நீதி கேட்டு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை போராட்டம் நடத்த சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ள விவசாயச் சட்டங்களுக்கு எதிராக மறியல் போராட்டத்தின் போது தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும், ஆண்டு முழுவதும் நடந்த போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கவும் விவசாயிகள் கோருகின்றனர்.

பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் போராட்டம் குறித்து கூறுகையில், எஸ்கேஎம்மின் அழைப்பின் பேரில் லக்கிம்பூர் கெரிக்கு செல்கிறோம் என்றார். அங்கு 72 மணி நேர தர்ணாவில் பங்கேற்போம் என மேலும் கூறினார். 

பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரஹான்) பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகாலன், போராட்டத்தில் பங்கேற்க பெண்கள் உட்பட சுமார் 2,000 விவசாயிகள் உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டனர் என்று தெரிவித்தார். 

பஞ்சாபைச் சேர்ந்த 10,000 விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் (தொளபா) தலைவர் மஞ்சித் சிங் ராய் தெரிவித்தார். சிலர் ரயில்களிலும், சிலர் சொந்த வாகனங்களிலும் செல்கிறார்கள் என்று மஞ்சித் சிங் ராய் மேலும் கூறினார்.

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தையான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்