Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோடு டாஸ்மாக்கில் 25 கோடி கருப்புப் பணம் :- ஆர்டிஐ தகவல்.

Muthu Kumar August 09, 2022 & 15:30 [IST]
ஈரோடு டாஸ்மாக்கில் 25 கோடி கருப்புப் பணம் :- ஆர்டிஐ தகவல்.Representative Image.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்திய பிரதமர் மோடி திடீரென பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அன்று நள்ளிரவில் இருந்து 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் அந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில வாணிக கழகம் (டாஸ்மாக்) மாநிலத்தில் உள்ள அனைத்து முதுநிலை மண்டல இயக்குநர்கள், மாவட்ட மேலாளர்கள், மற்றும் டிப்போ மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், “மத்திய அரசின் கொள்கை முடிவின்படி 500,1000 ரூ செல்லாது என அறிவித்துள்ளது. எனவே 10-11-2016க்குள் சில்லறை வணிகம் மூலம் பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி விட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த சுற்றறிக்கையினை மீறி தமிழகத்தில் ஈரோடு, தேனி, திருச்சி, தூத்துக்குடி, கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது.

இதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சென்னையை சேர்ந்த ஆர்டிஐ செயல்பாட்டாளர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு வணிக கழகம் அனுப்பிய பதிலில் தெரிய வந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்