Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொட்டும் மழையில் நடுக்காட்டில் தவித்த 3 கர்ப்பிணி... உடனடியாக மீட்ட அதிகாரிகள்..

Muthu Kumar August 06, 2022 & 13:45 [IST]
கொட்டும் மழையில் நடுக்காட்டில் தவித்த 3 கர்ப்பிணி... உடனடியாக மீட்ட அதிகாரிகள்..Representative Image.

கேரள மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்து வரும் மழையின் காரணமாக கேரளாவில் உள்ள அணைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இடுக்கி அணை, அருவிக்கரை, மலம்புழா உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுபோல சுமார் 22 அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, மழை, வெள்ளம் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 36 வீடுகள் முழுமையாக சேதமடந்துள்ளன. அதன்படி, வீடுகளை இழந்தவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மலைகிராமங்களில் தவிப்பவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வருகிறார்கள். அதன்படி, நேற்று சாலக்குடியில் உள்ள காட்டுக்குள் 3 கர்ப்பிணி பெண்கள் தவித்து கொண்டிருப்பதாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக நள்ளிரவு நேரத்தில் சம்பவ இடத்திற்க்கு சென்ற வனத்துறையினர் உதவியுடன் 3 பெண்களையும் மீட்டுள்ளனர்.

மேலும், கர்ப்பிணி பெண்களை மீட்டு வந்த குழுவினரை வருவாய் துறை மந்திரி உட்பட பலதரப்பினர் பாராட்டி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்