Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Uttarakhand Latest News : புனித யாத்திரையில் 39 பேர் பலி...?

Muthu Kumar May 16, 2022 & 12:58 [IST]
Uttarakhand Latest News : புனித யாத்திரையில் 39 பேர் பலி...?Representative Image.

Uttarakhand Latest News : உத்தரகாண்டில் பிரசித்தி பெற்ற சார்தம் புனித யாத்திரையில் 39 பேர் பலி.

சார்தம் புனித யாத்திரை

உத்தரகாண்டில் பிரசித்தி பெற்ற சார்தம் புனித யாத்திரைக்காக கடந்த 3ந்தேதி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைதளங்கள் திறக்கப்பட்டன.  இந்த வலைதளத்தில் யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்தனர்.

கோவிலுக்கு செல்ல தடை 

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறைந்துள்ளதை முன்னிட்டு சில தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி, 6ம் தேதி கேதர்நாத் மற்றும் 8ம் தேதி பத்ரிநாத்தும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன.

பக்தர்கள் பலி

இந்நிலையில், சார்தம் புனித யாத்திரை தொடங்கி 13 நாட்களில் யாத்திரைக்கு சென்ற பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளதாக உத்தரகாண்ட் பொது சுகாதார இயக்குனரான டாக்டர் சைலஜா பட் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களில் பலர் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலையேறுவதில் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

சுகாதார பரிசோதனை

இதனை தொடர்ந்து யாத்திரை செல்லும் வழிகளில் முக்கிய சந்திப்புகளில் பக்தர்களுக்கு சுகாதார பரிசோதனை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்த முகாமில் உடல்நலம் பாதித்த பக்தர்களை ஓய்வு எடுக்க அறிவுறுத்துகின்றனர்.  மேலும் உடல்நலம் தேறிய பின்பு பயணம் செய்யும்படி அறிவுறுத்துகின்றனர்.

டாக்டர் சைலஜா

உத்தரகாண்டில் பிரசித்தி பெற்ற சார்தம் புனித யாத்திரைக்காக பலர் பயணம் செய்யும் வழிகளிலேயே உயிரிழக்கின்றனர். இந்நிலையில், மருத்துவ ரீதியாக உடல்நிலை சரியில்லாத நபர்கள் பயணம் செய்ய வேண்டாம் என டாக்டர் சைலஜா அறிவுறுத்தியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்