Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்ஃபி மோகத்தால் சோகம்.. நான்கு மாணவிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

Sekar Updated:
செல்ஃபி மோகத்தால் சோகம்.. நான்கு மாணவிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!Representative Image.

கர்நாடகாவின் பெலகாவி அருகே உள்ள கிட்வாட் நீர்வீழ்ச்சிக்கு சென்ற நான்கு நான்கு மாணவிகள் நேற்று காலை நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் நடந்த போது நான்கு சிறுமிகளும் செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. நான்கு மாணவிகளும் பெலகாவியின் காமத் கல்லியில் உள்ள ஒரு மதரஸாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சம்பவத்தன்று நேற்று காலை கிட்வாட் நீர்வீழ்ச்சியில் சுமார் 40 மாணவிகள் சுற்றுலா சென்றதாகவும், செல்ஃபி எடுக்க முயன்ற 5 மாணவிகள் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஐந்து பேரில், ஒரு மாணவியை உள்ளூர் இளைஞர்கள் மீட்டனர்.

ஆனால் மற்ற நான்கு மாணவிகளை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்தையடுத்து மாணவிகள் அனுமதிக்கப்பட்ட பிம்ஸ் மருத்துவமனை அருகே ஏராளமானோர் திரண்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் படையை போலீசார் குவித்தனர்.

பெலகாவி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ரவீந்திர கடாடி நிலைமையை கண்காணிக்க மருத்துவமனைக்கு விரைந்தார். இருப்பினும், கித்வாட் நீர்வீழ்ச்சி புவியியல் ரீதியாக மகாராஷ்டிராவிற்குள் வருவதால், பிரேத பரிசோதனை செய்ய கர்நாடக காவல்துறை மகாராஷ்டிரா காவல்துறையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் சந்த்காட் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு ஜூலையில், இதேபோன்ற சம்பவம் கர்நாடகாவின் நீர்சாகர் நீர்த்தேக்கத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 22 வயது நபர் செல்ஃபி எடுக்கும்போது அதில் விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தையடுத்து நீர்சாகர் நீர்த்தேக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்