Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

63 வயது 53 மனைவிகள்... அத்தனையும் பேரழகிகளாம்.. வாழ்ந்த இப்படி வாழணும்.. 

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 18:00 [IST]
63 வயது 53 மனைவிகள்... அத்தனையும் பேரழகிகளாம்.. வாழ்ந்த இப்படி வாழணும்.. Representative Image.

சவுதி அரேபியாவை சேர்ந்த 63 வயதான அபு அப்துல்லா என்பவரன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாம் வாயை பிளந்து வருகிறார்கள்.. அப்படி என்னவா இருக்கும்?வாங்க பார்க்கலாம். 

சமீபத்தில் தான் முன்பு தான் தாய்லாந்து இளைஞர் தனது 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த செய்தி பெரிய அளவில் வைரலாக, நம்ம 80ஸ் கிட்ஸ் எல்லாம் "வாழ்ந்தால் நம்ம சோரூட் போல வாழணும்" சொல்லி கலாய்த்து கொண்டிருந்தனர். ஆனால், சோரூட்டையும் ஒருவர் மிஞ்சிவிட்டார். 63 வயதான சவுதி அரேபியாவை சேர்ந்த அபு அப்துல்லா 53 பெண்களை திருமணம் செய்துள்ளார். தற்போது அதை பற்றி அவரே பேட்டி அளித்துள்ளார். 

முதன்முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாகவே வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்துவிட்டது. தொடர்ந்து தகராறு, மனவருத்தம் போன்றவை இருந்ததால், அதிலிருந்து விடுபட நான் 2வது பெண்ணை திருமணம் கொண்டேன். முதல்மனைவியால் எனக்கு மனரீதியான பாதிப்புக்கு, இந்த 2வது மனைவி மருந்தாக பயன்பட்டார்.. ஆனால் 2வது மனைவியுடனும் கருத்து வேறுபாடு வந்துவிட்டது.. முதல் மனைவிக்கும், 2வது மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால், இந்த 2 மனைவிகளுடன் ஏற்பட்ட பிரச்சனைகளை மறக்க, 3வது திருமணம் செய்து கொண்டேன்.

இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 கல்யாணம் வரை செய்துகொண்டேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, உடல் சுகத்துக்காக நான் இத்தனை திருமணங்களை செய்து கொள்ளவில்லை. மனரீதியாக நான் நிம்மதியாக இருக்கணும். மனம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கணும், சந்தோஷமாக இருக்கணும் என்பதற்காகவே நான் திருமணம் செய்து கொண்டேன். அதிலும் வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் ஸ்திரத்தன்மை உருவாகிறது. நான் மணம் முடித்த அத்தனை பெண்களும் பேரழகு" என்கிறார் அப்துல்லா.

அதாவது, அப்துல்லா கல்யாணம் செய்த எல்லா மனைவிகளுடனும் தகராறு வந்துள்ளது. அதேசமயம், எந்த பிரச்சனையும் மனைவியுடன் பேசி தீர்த்து கொள்ள அப்துல்லா விரும்பவில்லை என தெரிகிறது. சண்டையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட வேண்டும், மனநிம்மதியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அடுத்தடுத்து இவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளது வியப்பை தந்து வருகிறது. 20 வயதில் முதல் கல்யாணம் அப்துல்லாவுக்கு நடந்துள்ளது. 23 வயதிலேயே 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அனைத்து திருமணங்களையும் பாரம்பரிய முறைப்படி செய்துள்ளார். பெரும்பாலும் சவுதிலேயே இந்த கல்யாணங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், ஒருநாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு போனாராம். அங்கேயே ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்துபோய், உடனே அவரையும் கல்யாணம் செய்து கொண்டாராம். இப்போது விஷயம் என்னவென்றால், இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது முடிவெடுத்துவிட்டாராம் "மாப்பிள்ளை" அப்துல்லா..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்