Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்சாரம் தாக்கி உயிரிழப்பை தடுக்க...69 வயது தாத்தா கண்டுபிடித்த...அந்த டிவைஸ் இதுவா?

Priyanka Hochumin September 20, 2022 & 11:05 [IST]
மின்சாரம் தாக்கி உயிரிழப்பை தடுக்க...69 வயது தாத்தா கண்டுபிடித்த...அந்த டிவைஸ் இதுவா?Representative Image.

மானாமதுரையைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஒருவர் மழை காலங்களில் மின்சாரம் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மூன்று விதமான சுவிட்ச் போர்டுகளை வடிவமைத்துள்ளார். அது குறித்த விரிவான தகவல் இதோ இந்த பதிவில்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணார்தெருவைச் சேர்ந்த 65 வயது சதாசிவம் என்பவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.வேலை பார்த்து மீதி நேரங்களில் மக்களுக்கு பல்வேறு வகையாக பயன்படும் புது சாதனங்களை தானே உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அப்படியாக இன்னும் சிறிது நாட்களில் மழை காலம் வரப்போகும் என்பதால், மின்கசிவு ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்க தண்ணீருக்குள்ளேயே இயங்கும் சுவிட்ச் போர்டு ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பிளக் பாய்ன்ட்டில் இரும்புக் கம்பி போன்ற மின் கடத்தும் பொருட்களைப் பொருத்தினாலும் மின்சாரம் தாக்கத்தை வகையில் இன்னொரு சுவிட்ச் போர்டை வடிவமைத்துள்ளார். இதில் ஏதேனும் எலக்ட்ரிக் டிவைஸின் பிளக்கை பொருத்தினால் மட்டுமே மின்சாரம் வரும்.

அடுத்து மொபைல் சார்ஜருக்கென் ஒரு தனி சுவிட்ச் போர்டை உருவாக்கியுள்ளார். இதில் குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே பயன்படுவதால் குழந்தைகள் தொட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். ஆனால் இதில் மற்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதனை பற்றி சதாசிவம் அவர்கள் கூறுகையில், நான் தயாரித்த இந்த சுவிட்ச் போர்டுகளை பயன்படுத்தினால் மீன்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படாது என்று தீர்க்கமாக தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்