Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குலுங்கியது பூமி.. ரிக்டர் அளவுகோலில் 5.9 அளவிலான நிலநடுக்கம்.. 7 பேர் பலியான பரிதாபம்!!

Sekar Updated:
குலுங்கியது பூமி.. ரிக்டர் அளவுகோலில் 5.9 அளவிலான நிலநடுக்கம்.. 7 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

ரிக்டர் அளவுகோலில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடமேற்கு ஈரானைத் தாக்கியது. இதில் தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் 440 பேர் காயமடைந்தனர். 

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ள தகவலின் படி, நிலநடுக்கம் ஈரான்-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள கோய் நகரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9:44 மணிக்கு ஏற்பட்டது.

ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் இது உணரப்பட்டது.

இதற்கிடையில், ஈரானின் மத்திய நகரமான இஸ்பஹானில் உள்ள ராணுவ ஆலையிலும் பலத்த வெடிப்பு ஏற்பட்டது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ஈரானின் ஊடகங்கள் இது ஒரு தோல்வியுற்ற ட்ரோன் தாக்குதல் என்று கூறியது.

ஈரானில் கடைசியாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தான் மிகப்பெரியது. இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர். 

ஈரான் பொதுவாக அடிக்கடி சிறிய அளவிலான நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு பூகம்பத்தை அனுபவிக்கிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். 

2003 இல், 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வரலாற்று நகரமான பாம்மில் ஏற்பட்டது. இதில் 26,000 பேர் கொல்லப்பட்டனர். 2017ஆம் ஆண்டு மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்