Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மார்க் ஷீட்டில் திருத்தம் செய்த மாணவி.. பெற்றோரிடம் கூறுவதாக ஆசிரியர் கண்டிப்பு… பயத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு..!

Gowthami Subramani November 03, 2022 & 15:55 [IST]
மார்க் ஷீட்டில் திருத்தம் செய்த மாணவி.. பெற்றோரிடம் கூறுவதாக ஆசிரியர் கண்டிப்பு… பயத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு..! Representative Image.

நாகப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர், ஆசிரியர் கண்டித்ததால் பயந்து விபரீத முடிவை எடுத்துள்ளார்.

நாகையில், தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் என்பவரது மகள் ஸ்ரீநிதி. இவர், நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி ஆங்கில தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவி தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தி பிறகு கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் தேர்வுத் தாளை ஆசிரியர் வாங்கிப் பார்த்த பிறகு, மதிப்பெண் திருத்தியிருப்பதைக் கண்டித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து சொல்லி உள்ளார். இதனால், மாணவி பயந்து போய் பள்ளி முடிந்த பிறகு வீட்டில் அருகே உள்ள குளத்திற்கு அருகே ஸ்கூல் பேக்கை போட்டு விட்டு, குளத்தில் குதித்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கியிருந்த மாணவியைக் கண்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்