Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே ஒரு க்ளிக்.. 8 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளை! விவசாயி கவலை.!

Gowthami Subramani Updated:
ஒரே ஒரு க்ளிக்.. 8 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளை! விவசாயி கவலை.!Representative Image.

ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வந்த மெசேஜ் ஒன்றைக் க்ளிக் செய்ததால், ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக, இணைய மோசடிகள் வெகுவாக உயர்ந்து வருகின்றன. இதனால், பணம் உள்ளவர், இல்லாதவர் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் வசிக்கும் விவசாயி பவன் குமார் சோனி. இவரது மகன் ஹர்ஷ் வர்தன். ஹர்ஷ் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் தனது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்துள்ளார். 
 

ஒரே ஒரு க்ளிக்.. 8 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளை! விவசாயி கவலை.!Representative Image

இதன் காரணமாக, வங்கி தொடர்பான செய்திகள் அனைத்தும் அவரது அலைபேசியில் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் நாள், அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் KYC-ஐப் புதுப்பிக்க வேண்டும் எனவும் இணைப்புடன் கூடிய SMS வந்துள்ளது. இதனை வங்கி செய்தியாக எண்ணி, ஹர்ஷ் வர்தன் க்ளிக் செய்தவுடன் அவரது போனில் டூப்ளிகேட் ஆக எஸ்பிஐ யோனோ செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது.

இந்த புதிய செயலியில் விவரங்களை உள்ளிட்ட உடன், ஏழே நிமிடங்களுக்குள் பரிவர்த்தனை செய்திகளைப் பெற்று ரூ.8,03,899-ஐ இழந்தார். ஒரே ஒரு கிளிக் செய்ததில், 8 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்