நீலகிரி மாவட்டம் அரக்காட்டில் கடந்த 10-ம் தேதி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் 4 வயது மகள் சாரிதா என்ற குழந்தையை தேயிலை தோட்டத்தில் இருந்த சிறுத்தை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து, வனத்துறை எடுத்த முதற்கட்ட நடவடிக்கையில், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தேயிலை தோட்டங்களில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில, தானியங்கி கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இத்னையடுத்து, நேற்று தேயிலைத் தோட்டங்களில் கூண்டுகளை வைத்து அதில் ஆடுகளை கட்டி வைத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், இன்று காலை சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவக் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…