Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரண்டாம் எலிசபெத் ராணியின் இறப்பை கேவலப்படுத்திய கடை உரிமையாளர்…! கடையை சூறையாடிய பொதுமக்கள்..!

Gowthami Subramani September 12, 2022 & 15:20 [IST]
இரண்டாம் எலிசபெத் ராணியின் இறப்பை கேவலப்படுத்திய கடை உரிமையாளர்…! கடையை சூறையாடிய பொதுமக்கள்..!Representative Image.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு நாடு முழுவதும் மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வந்த நிலையில், ஒரு பெண் ராணியின் இறப்பை இழிவுபடுத்தியதாகக் கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 8 ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரது மறைவை இன்னும் ஜீரணித்து இயலாத மக்கள் துன்பத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில், ஸ்காட்லாந்தில் மீன் மற்றும் சிப்ஸ் கடை உரிமையாளரான ஷாம்பெயின் என்ற பெண், கடைக்கு வெளியே நடனமாடி மக்களைக் கோபப்படுத்தினார். ராணியின் மறைவிற்கு தேசமே ஸ்தம்பித்துப் போன நிலையில், Jacki Pickett தமது சமூக ஊடக பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அந்தப் பெண் பதாகை ஒன்றை கையில் ஏந்திய படி நின்று கொண்டிருந்தவாறும், அந்தப் பதாகையில் Lizard Liz Dead என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண் அரச குடும்ப எதிர்ப்பாளர் எனக் கூறப்படுகிறது. இந்த காணொளி பரவிய நிலையில், கொதிப்படைந்த மக்கள் Jacki Pickett-ன் மீன் மற்றும் சிப்ஸ் கடைக்கு முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடையின் சன்னல்களை நொறுக்கி, மூட்டை வீச்சும் நடத்தியுள்ளனர். இதற்கிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கடையை மூட வைத்து, அந்தப் பெண்மணியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருந்த போதிலும், மக்கள் சமூக ஊடகங்களில் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணை அந்த நகரை விட்டு வெளியேறும் படியும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகக் கூறப்பட்டு வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் இந்தப் பெண்ணின் செயலைக் கண்டித்து, ஒருவர் “எங்கள் ராணியாரின் இறப்பை கொண்டாடும் அளவுக்கு துணிச்சலா..? இது மனித குலத்திற்கே அவமானம்” என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்