Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

என்னது இனிமே கோவிட்-19 ஆபத்தானது இல்லையா...WHO அறிவிப்பு | Covid-19 Global Health Emergency

Priyanka Hochumin Updated:
என்னது இனிமே கோவிட்-19 ஆபத்தானது இல்லையா...WHO அறிவிப்பு | Covid-19 Global Health EmergencyRepresentative Image.

உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இனி கோவிட்-19 "உலகளாவிய சுகாதார அவசரநிலையை" பிரதிநிதித்துவப்படுத்தாது என்று அறிவித்துள்ளது. அதாவது இனி கொரோனா அச்சுறுத்தும் நோயாக கருதப்பட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த கொடூர கொரோனா தொற்று. அன்று தொடங்கி இன்று வரையில் உலகளவில் ஏறத்தாழ 7 மில்லியன் மக்கள் இறந்ததாக WHO தலைவர் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் தற்போது எப்படி கோவிட்-19 இனிமேல் ஆபத்தான நோய் இல்லை என்று கூறுகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கான முழு விவரத்தையும் WHO வெளியிட்டுள்ளது.

நேற்று, அவசரநிலைக் குழு 15வது முறையாகக் கூடி, சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு டாக்டர் டெட்ரோஸிடம் பரிந்துரை செய்தனர். அவர்கள் வைரஸின் இறப்பு விகிதம் ஜனவரி 2021 இல் வாரத்திற்கு 100,000 க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்று ஏப்ரல் 24 அன்று 3,500 க்கு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த தொற்றால் மக்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த ஆலோசனையை நான் ஏற்றுக்கொண்டு இனி மக்கள் நலமாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் கோவிட்-19 ஐ இனி ஆபத்தில்லாத வைரஸ் தொற்று என்று அறிவிக்கிறேன் என்று கூறினார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்