Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

காசு இல்லாமல் காதலிக்கு கிஃப்ட் வாங்குவது எப்படி? பாத்ரூமில் பதுங்கி செல்போன் திருடிய இளைஞர் கைது.!

madhankumar August 04, 2022 & 11:07 [IST]
காசு இல்லாமல் காதலிக்கு கிஃப்ட் வாங்குவது எப்படி? பாத்ரூமில் பதுங்கி செல்போன் திருடிய இளைஞர் கைது.!Representative Image.

காதலியை கவிழ்க்க காதலர்கள் செய்யும் சில விஷயங்கள் சக்ஸஸ் ஆவது உண்டு ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களுக்கே ஆபத்தாக அமைவதும் உண்டு. அது போன்ற செயல்தான் பெங்களுருவில் நடந்துள்ளது.

காதலிப்பவர்கள் ஓரளவிற்கு பைத்தியக்காரத்தனம் செய்தால் பரவாயில்லை முழுநேரமம் அப்படியே செய்தல் என்ன செய்வது. இதுவெல்லாம் ஒரு சாகசம் என நினைத்து சில இளைஞர்கள் பெரும் இன்னல்களில் சிக்கி தவிக்கின்றனர். அந்தவகையில் பெங்களுருவில் 27 வயது இளைஞர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் காதலிக்கு பிறந்த நாள் வந்துள்ளது. அதை முன்னிட்டு அவரின் ஜூலியட்டை இம்ப்ரஸ் செய்ய நினைத்த அந்த ரோமியோ விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

 பாத்ரூமில் பதுங்கிய காதலன்:

அவர் கொடுக்கவிருக்கும் அந்த பரிசு மிகவும் காஸ்ட்லியாக இருக்க வேண்டும் என எண்ணிய அந்த காதலன், ஜேடிபி நகரில் இயங்கிவரும் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்துள்ளார், அவர் உள்ளே சென்ற நேரமும் கடையை மூடும் நேரமும் ஒன்றாக இருக்கவே, நேராக கடைக்குள் சென்ற அவர் அங்கு இருந்த பாத்ரூமிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் கடைக்குள் யாரும் இல்லை என நினைத்து கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

தக்க தருணம் பார்த்து காத்திருந்த அந்த ரோமியோ "இது இந்த பேட்ட பாயுற நேரம்" என்பது போல் நினைத்து பாத்ரூம் கதவை திறந்து கடைக்குள் நுழைந்துள்ளார். அப்போது கடையை பார்த்து திகைத்து நின்றுள்ளார். காரணம் பார்க்கும் அனைத்துமே அழகாக இருந்ததால் "எதை எடுப்பது எதை விடுவது" என குழப்பமாக இருந்துள்ளது போலும். அப்போது காதலிக்காக ஒரு செல்போனை மட்டும் எடுத்து செல்லலாம் என நினைத்து வந்த அவரது மனதில் பேராசை எழுந்துள்ளது, சற்றும் தாமதிக்காமல் மொத்தமாக 7 காஸ்ட்லியான செல்போன்களை எடுத்து தனது பைக்குள் சொருகிய அவர் மீண்டும் தான் பதுங்கியிருந்த பாத்ரூமிற்கு திரும்பியிருக்கிறார்.

கடை ஊழியர்கள் அதிர்ச்சி:

மறுநாள் காலையில் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே வந்து வழக்கமான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளனர், அப்போது பாத்ரூமில் பதுங்கியிருந்த நபர் யாரும் பார்க்காத நேரத்தில் கம்பி நீட்டியுள்ளார். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு செல்போன் மட்டும் தரையில் விழுந்து கிடந்துள்ளது. பின்னர் சோதனை செய்து பார்த்ததில் 7 செல்போன்கள் மட்டும் காணாமல் போயுள்ளது. 

போலீசில் புகார்:

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது, பின்னர் அங்கு வந்த போலீசார் காணாமல் போன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து ட்ராக் செய்து பார்த்துள்ளனர். அப்போது அவர் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல்கள் கிடைத்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் அவரது பெயர் அப்துல் முன்னாப் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர் பிடிஎம் லே அவுட் பகுதியில் செயல்பட்டு வரும்  ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார் எனபதும் தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அவர் மீது அப்துல் முன்னாப்பிற்கு காதலும் ஏற்பட்டுள்ளது, அவரை தனது காதல் வலையில் வீழ்த்த முடிவெடுத்த அவர், செல்போனை பரிசாக தரலாம் என முடிவெடுத்துள்ளார், ஆனால் கையில் காசு இல்லை என்றதும் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பின்னர் கூகுளில் காசு இல்லாமல் காதலிக்கு கிப்ட் தருவது எப்படி என தேடியபோது கிடைத்த ஐடியாபடி இந்த திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் திருடிய 7 செல்போன்களில் 6 போன்களை தனது காதலிக்கு பரிசளித்துவிட்டு, மீதமிருந்த ஒரு செல்போனை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாகவே அப்துல் பிடிபட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இப்போது போலீசார் 6 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர்.. அவைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும். காதலியை தன்னுள் சிறைபிடிக்க நினைத்த அப்துல் தற்போது காவல்துறையின் சிறையில் சிக்கி தவித்து வருகிறார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்